மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பி.ஏ.எஸ்.எல்.பி,( செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல் பட்டப்படிப்பு), பி.பி.டி, பி.எஸ்.சி ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ டெக்னாலஜி உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று காலை 10 மணி முதல் 19ஆம் தேதி வரை வழங்கபட உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும், www.tn.health.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களிலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், விண்ணப்பக் கட்டணமாக 400 ரூபாய் வங்கி மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.