தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிரௌசிங் சென்டர் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை.. - ஆன்லைனில் ரம்மி விளையாட்டு

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தினால் பிரௌசிங் சென்டர் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

A Man
A Man

By

Published : Jan 11, 2022, 9:16 AM IST

சென்னை: கோயம்பேடு சீமாத்தமன் நகரை சேர்ந்தவர் தினேஷ்(41). இவர் கோயம்பேடு சின்மயா நகரில் குளோபல் நெட் பிரௌசிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் ஜனவரி 9 ஆம் தேதி, மனைவி மற்றும் பிள்ளைகளை வீட்டின் படுக்கையறையில் சென்று உறங்கிய பொது தினேஷ் ஹாலிலேயே உறங்கி உள்ளார். பின்னர், நேற்று அதிகாலை அவரது மனைவி அறையிலிருந்து வெளியே வந்த போது, தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், காவல்துறை நடத்திய விசாரணையில், தினேஷ் தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளது தெரியவந்தது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல! சிந்தித்து செயல்படுங்கள்..

கடன் தொல்லை

அந்த கடிதத்தில் 'தான் பலரிடம் ரூ.10 லட்சம் அளவில் பணம் வாங்கியதாகவும், அதை வேறு நபர்களுக்கு கடனாகக் கொடுத்ததாகவும், அந்த பணம் திரும்பி வரவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், யாருக்கெல்லாம் தினேஷ் பணம் கொடுத்துள்ளார்? யாரெல்லாம் தினேஷுக்கு பணம் கொடுத்து உள்ளார்கள் என்பதை எழுதி வைத்துவிட்டு, என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை!' எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டவர்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு

கடிதத்தைக் கைப்பற்றிய காவல்துறை தினேஷின் மனைவியிடம் விசாரணை செய்தபோது, தினேஷ் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கமுடையவர் என்பதும், கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் இழந்ததால் மனமுடைந்து குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததையும் தெரிவித்துள்ளார்.

சைபர் காவல்துறை விசாரணை

கடனை திருப்பித் தர முடியாததால், தினேஷ் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, தினேஷின் கைப்பேசியை கைப்பற்றிய காவல்துறையினர் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் துரைப்பாக்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினேஷின் மரணத்திற்குக் கடன் தொல்லை காரணமா? அல்லது ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்தது காரணமா என்ற இரண்டு கோணங்களிலும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: HOROSCOPE : இன்றைய ராசிபலன் - ஜனவரி 11

ABOUT THE AUTHOR

...view details