தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் திருடுபோன ரூ.3 கோடி மதிப்புள்ள வெண்கல சிலை மீட்பு - மூன்று கோடி மதிப்புள்ள ஆஞ்சநேயர் சிலை திருட்டு

சென்னை மடிப்பாக்கம் ஆஞ்சநேயர் கோயிலில் திருடுபோன ரூ.3 கோடி மதிப்புள்ள வெண்கல சிலையை காவல்துறையின் மீட்டனர்.

Bronze idol
Bronze idol

By

Published : Jan 20, 2022, 8:20 AM IST

சென்னை: மடிப்பாக்கம்- உள்ளகரம் சாமி நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள இரண்டடி உயர வெண்கல ஆஞ்சநேயர் சிலை ஜனவரி 2ஆம் தேதி திருடப்பட்டது. இதுகுறித்து கோயி்ல் நிர்வாகி குருராஜன் மடிப்பாக்கம் காவல்துறையில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், காவலர்கள் தனிப்படை அமைத்து சிலை திருடியவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில், நேற்று(ஜன.19) பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜா (எ) ஐசக் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து சிலை மீட்கப்பட்டது. மேலும் திருட்டில் தொடர்புடைய சுருட்டை முருகன் என்பவர் தேடப்பட்டுவருகிறார். ஏற்கனவே ஐசக் மீது பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் சிலை திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதையும் படிங்க:கோயிலில் சிலை திருடியவர் கைது

ABOUT THE AUTHOR

...view details