சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் பணிக்காக 20 அடியில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்தப் பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலிருக்கு அதன்மேல் தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.
அந்த இரும்புப் பாலத்தில் இன்று(அக்.25) நள்ளிரவு சென்னை துறைமுகத்திலிருந்து 60 டன் எடை இரும்பு பொருள்களை ஏற்றிவந்த லாரி சென்றுகொண்டிருந்த போது, எடை தாங்காமல் பாலம் சரிந்தது. அதனால் லாரி பள்ளித்தில் கவிழ்ந்து சிக்கியது. நல்வாய்ப்பாக ஓட்டுநர் பள்ளத்தில் சிக்கியபோது வெளியே குதித்து தப்பித்தார்.
4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கண்டெய்னர் லாரி பள்ளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. தற்போது பள்ளத்தின் மேல் மீண்டும் இரும்புப் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதனால் வாகனங்கள் வேறு வழியில் திருப்பிவிடப்படுகின்றன.