பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நேற்று சிங்கப்பூரில் இருந்து 327 பயணிகளுடன் லண்டனுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணித்த ரோனா கிளமெண்ட் (77) என்ற பிரிட்டிஷ் நாட்டுப் பெண்ணுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கம்! - chennai airport
சென்னை: சிங்கப்பூரில் இருந்து லண்டனுக்கு சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கம்
அப்பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு விமானம் தரையிறக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்திலுள்ள மருத்துவ குழுவினர் அப்பெண்ணுக்கு அவசர சிகிச்சை அளித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் விமானம் தாமதமாக இன்று அதிகாலை 3.15க்கு 326 பயணிகளுடன் லண்டன் புறப்பட்டு சென்றது.