சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா முகமது என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ” கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும், பன்னாட்டு விமான சேவைகள் ரத்து காரணமாகவும், இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, மத்திய அரசு 'வந்தே பாரத்' திட்டம் துவங்கியது.
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் தாய்நாடு செல்ல விரும்புவோரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களில் கர்ப்பிணிகள், முதியவர்கள், வேலை இழந்தவர்கள் உள்ளிட்டோர் முன்னுரிமை அடிப்படையில் அழைத்து வரப்படுகின்றனர். இதனடிப்படையில் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், குவைத், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஆனால், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் விமான நிலையங்களின் பட்டியலில் தமிழ்நாடு விமான நிலையங்கள் எதுவும் இல்லாத காரணத்தால், அங்கு சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் உள்ளனர்.