சென்னை:கோயம்பேடு பூ மார்க்கெட்டில் டீ கடை நடத்தி வரும் மாணிக்கம் என்பவரிடம், மார்க்கெட் மேலாண்மை கமிட்டியின் தலைமை நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த உதவி நிர்வாக அலுவலர் எம்.சிவலிங்கம், ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுக்காவிட்டால் கடையை மூடி சீல் வைக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக மாணிக்கம், லஞ்ச ஒழிப்பு காவலர்களிடம் புகார் செய்தார். காவலர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாணிக்கம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்த போது, அலுவலர் சிவலிங்கம் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலருக்கு இரண்டு ஆண்டு சிறை - Koyambedu flower market
தொடர்ந்து டீ கடை நடத்த அனுமதிப்பதற்கு, ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கில், கோயம்பேடு மார்க்கெட் மேலாண்மை கமிட்டி நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Special court
இந்த வழக்கை விசாரித்த சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம் பிரகாஷ், அலுவலர் சிவலிங்கம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.