தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வைரமுத்துவை கைது செய்யாமல் கல்யாணராமனை கைது செய்தது ஏன்? ஹெச்.ராஜா - BPJ leader HRaja tweet about vairamuthu news in Tamil

சென்னை: வைரமுத்துவை கைது செய்யாத காவல்துறை கல்யாணராமனை செய்தது கைது ஏன் என பாஜக மூத்தத் தலைவர் ஹெச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா ட்வீட்
பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா ட்வீட்

By

Published : Feb 1, 2021, 6:29 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கல்யாணராமன், நபிகள் நாயகம் பற்றி இழிவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கல்யாணராமனைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாண ராமன் உள்ளிட்ட இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து அவிநாசி கிளைச்சிறையில் அடைத்தனர். கல்யாண ராமன் மீது 147, 148, 504, 506(2), 153(பி), 269 ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா ட்வீட்

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்த ட்வீட் செய்துள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, “ ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கத்தக்க விதத்தில் விமர்சித்த இந்துவிரோதி வைரமுத்துவை கைது செய்யாத காவல்துறை கல்யாணராமனை கைது செய்துள்ளது பாரபட்சமானது. கண்டிக்கத்தக்கது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து- முதலமைச்சர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details