தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காதலி பேச மறுத்ததால் இளைஞன் தற்கொலை - காதலன் தூக்கிட்டு தற்கொலை

திருநின்றவூரில் கருத்து வேறுபாடு காரணமாக, காதலி பேச மறுத்ததால், காதலன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காதலன் தூக்கிட்டு தற்கொலை
காதலன் தூக்கிட்டு தற்கொலை

By

Published : Dec 10, 2021, 12:06 PM IST

Updated : Dec 10, 2021, 12:12 PM IST

சென்னை: திருநின்றவூர் அருகே பெரியார் நகர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார், இவருக்கு வயது 24. இவர் பெயிண்டராக வேலை செய்துவந்தார். இதற்கிடையில், செந்தில்குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.

அதன் பின்னர், இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்துவந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு செந்தில்குமாருக்கும், அந்த இளம்பெண்ணுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, செந்தில்குமாரிடம் கடந்த நான்கு நாள்களாக இளம்பெண் பேசாமல் இருந்துள்ளார்.

காதலன் தூக்கிட்டு தற்கொலை

இதனால், அவர் மனமுடைந்து இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று (டிசம்பர் 9) செந்தில்குமாரின் பெற்றோர் திருவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். அதன்பின்னர், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதற்கிடையில், இன்று (டிசம்பர் 10) காலை செந்தில்குமார் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல

இதனையடுத்து, தகவல் அறிந்த திருநின்றவூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். அதன்பின்னர், காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றது. காதலி பேச மறுத்ததால், காதலன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருநின்றவூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நரிக்குறவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் : ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

Last Updated : Dec 10, 2021, 12:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details