தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம் தயார்! - மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம் தயார்

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2022-23 ஆம் கல்வியாண்டில் வழங்குவதற்கு 5 கோடியே 19 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அளிப்பதற்காக மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புத்தகம் தயார்
புத்தகம் தயார்

By

Published : May 26, 2022, 12:40 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

புத்தகம் தயார்

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட பாடப்புத்தங்கள் அச்சிடப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 1 முதல் 7ஆம் வகுப்பு வரையில் முதல் பருவத்திற்கும், 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு முழு புத்தகம் என 3 கோடியே 35 லட்சத்து 63 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்டங்களில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் 1 கோடியே 83 லட்சத்து 85 ஆயிரம் அச்சிடப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கு, 100 அடி வேளச்சேரி - தரமணி இணைவழி சாலை, திருவான்மியூர், சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம் ஆகிய இடங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பஸ் எப்போ வரும்? - சென்னையில் வழிகாட்டும் புதிய செயலி..!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details