சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் 'அண்ணா அறிவுக் கொடை' என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நூலின் முதல்படியை ஸ்டாலின் வெளியிட, வைகோ பெற்றுக்கொண்டார்.
பேரணிக்கு அழைப்புவிடுத்த வைகோ!
இந்நிகழ்ச்சியில் அண்ணாவின் நினைவுகள் பற்றி விரிவாகப் பேசிய வைகோ, "தமிழர்கள் எந்தவித அடக்குமுறைக்கும் அஞ்சாதவர்கள்; பல போராட்டங்களில் ரத்தம் சிந்தி மானம் காத்தவர்கள்; அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நாளை மறுநாள் நடக்கவிருக்கும் பேரணிக்கு வாருங்கள்" என்று அழைப்புவிடுத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக பேரணிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டாலும் கண்டனப் பேரணி நடைபெறும் எனத் தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுக்கு வீரமணியின் அறிவுரை!
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசுகையில், "அண்ணா, கருணாநிதி ஆற்றிய பணியை திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது செய்துவருகிறார். அண்ணாவின் ஆழமான கருத்துகளை மொத்தமாகத் தொகுத்து மிக அருமையாக நூலில் பதிவு செய்துள்ளனர்.