தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதலமைச்சர் தொடங்கி வைக்கும் புத்தக கண்காட்சியில் மாணவர்களுக்கு இலவசம் - nanthanam Book Fair

சென்னை ந‌ந்தனத்தில் நடைபெற உள்ள 45ஆவது புத்தக கண்காட்சியில் மாணவர்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின,
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

By

Published : Dec 13, 2021, 4:10 PM IST

சென்னை:தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நந்தனத்தில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். அதன்படி, வரும் ஆண்டிற்கான புத்தக கண்காட்சி ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்க உள்ளார். இந்தக் கண்காட்சி வாரநாள்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 வரை நடைபெற உள்ளது. குறிப்பாக, இதில் மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் மற்றவர்களுக்கு 10 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:புத்தகம் திற - அறிவை விரிவு செய்...!

ABOUT THE AUTHOR

...view details