தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு நிலத்தை அபகரித்த அதிமுக பிரமுகர்: ஆவணம் இல்லாமல் பத்திரப் பதிவு!

சென்னை: அதிமுக பிரமுகர் ஒருவர் அரசு நிலத்தை அபகரித்த, ஆவணம் பெறமால், பதிவுத்துறை அலுவலர்கள் பத்திரம் பதிந்தாக வழக்கறிஞர் கர்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

By

Published : Feb 20, 2021, 3:45 PM IST

Bond registration
Bond registration

நில உச்சவரம்பு
தமிழ்நாடு முழுவதும் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் வரும் தமிழ்நாடு அரசால் கையப்படுத்தபட்ட நிலங்களை நில உச்சவரம்பு அலுவலகத்தின் தடையில்லா சான்று பெறாமலே சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு
நகர்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கடந்த 2008க்கு முன்னதாக பதிவு செய்யப்பட்டு இருந்தால், அவற்றிக்கான கட்டணம் செலுத்தி அதனை வரன் முறைப்படுத்தி கொள்ளலாம். அதன் பிறகு பதிவான எந்த ஒரு ஆவணமும் செல்லாது என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

தமிழ்நாடு முழுவதும் இதுவரையில் 1 கோடியே 89 லட்சத்து 79 ஆயிரத்து 446 சதுர மீட்டர் நிலங்களை அரசு கையகப்படுத்தியுள்ளது. இதில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 230 சதுர அடி நிலங்களுக்கு கட்டணம் செலுத்தி பொதுமக்களால் வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக பிரமுகர் அரசு நிலத்தை அபகரித்து ஆவணம் பெறமால் பதிவுதுறை அலுவலர்கள் பத்திரம் பதிந்தாக வழக்கறிஞர் கர்ணன் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்கறிஞர் கர்ணன் தெரிவிக்கும் போது, நான், இது தொடர்பாக தகவல் உரிமை சட்டத்தில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் தகவல் பெற்று தென்சென்னை உதவி பதிவுத்துறை தலைவருக்கு கடந்த 2020 ஜுன் 3ஆம் தேதி புகார் அளித்தேன். வேளாச்சேரி அதிமுக பகுதிச் செயலாளர் எம்.ஏ. மூர்த்தி என்பவர் வேறு ஒரு பட்டாவை காண்பித்து நில உச்சவ்ரம்பு கீழ் வரும் இடத்தை வேளாச்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டில் பதிவுசெய்துள்ளார். இதுபோல பலராலும் தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. புகார் அளித்தும் விசாரிக்க வேண்டிய பதிவுத்துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது. புகார் அளித்த எனக்கு ஆளும் கட்சி தரப்பில் பல்வேறு மிரட்டல் வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசுக்கு பல கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதனை உரிய முறையில் தடுக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க:சுடுகாட்டிற்கு செல்ல பாதையில்லை: சடலத்தை ஆற்றில் சுமந்து சென்ற அவலம்!

ABOUT THE AUTHOR

...view details