சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை இன்று (மார்ச் 22) மாலை செல்போனில் தொடர்புகொண்ட நபர் ஒருவர் கோயம்பேடு நூறடி சாலையில் அமைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் எனத் தெரிவித்துவிட்டு அலைபேசி தொடர்பைத் துண்டித்துவிட்டார்.
இதையடுத்து உடனடியாக காவல் துறையினரால் வெடிகுண்டு வல்லுநர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் விரைந்துவந்து அலுவலகத்தில் சோதனை செய்ததில், வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! - Bomb Threatning at Vijayakanth Office
சென்னை: தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
vijayakanth
வெடிகுண்டு மிரட்டல் வந்த எண்ணை சோதனை செய்தபோது திருவண்ணாமலை செய்யாறு பகுதியைச் சேர்ந்த கௌசல்யா என்பவரின் செல்போன் எண் என்பது தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.