சென்னையில் இருக்கும் ஆளுநர் மாளிகை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தும், ஆளுநர் மற்றும் அமைச்சர்களை சுட்டுக் கொன்று விடுவதாகவும் கூறி சரவணபிரசாத் என்பவரின் பெயரில் ஆஃபிஸ் ஆப் கவர்னர் பங்களா, கிண்டி என்று முகவரியிட்டு ஒரு கடிதம் வந்திருப்பதாக கிண்டி போலீசாருக்கு தகவல் வந்தது.
ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்; சென்னையில் பரபரப்பு - பன்வாரிலால் புரோஹித்
சென்னை: கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Bhavan
இதனையடுத்து மோப்ப நாய்களை கொண்டு காவல்துறையினர் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்தது. கடிதம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.