சென்னை, பல்லாவரத்தை அடுத்த பம்மல் அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்த திமுக வட்டச் செயலர் ரகு (வயது 50). இவருக்குத் திருமணமாகி கார்த்திக் (வயது 20) என்ற மகனும் கீர்த்தி (வயது 19) என்கிற மகளும் உள்ளனர். இந்நிலையில், ரகுவுக்கும் அவரது மனைவி மலர்விழிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, கடந்த 21ஆம் தேதி இரவு ரகு வீட்டில் சண்டை போட்டுவிட்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அதன்பின் ரகுவின் குடும்பத்தினர் அவரை இரண்டு நாள்களாகத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இன்று (அக்.23) பம்மல் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கடையில் சிதைந்த நிலையில், துர்நாற்றத்துடன் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதியில் மக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.