தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை பல்கலை. தேர்வில் 117 பேர் முறைகேடு: விசாரிக்கும் உயர்மட்டக் குழு? - உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 நபர்கள் முறைகேடாகத் தேர்வு எழுதியது குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ஆட்சிமன்றக் குழுக் கூட்டம்
ஆட்சிமன்றக் குழுக் கூட்டம்

By

Published : Dec 23, 2021, 2:39 PM IST

சென்னை:சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் துணைவேந்தர் கௌரி, உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தில் 117 நபர்கள் முறைகேடாகத் தேர்வு எழுதியது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் விசாரிக்கப்படுகிறது. அதனடிப்படையில் இது குறித்து விசாரிக்க உயர்மட்டக்குழு அமைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் படித்தவர்கள் பல ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கின்றனர். இந்த மாணவர்கள் அரியர் தேர்வு எழுத வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்தி முறைகேடு நடந்திருப்பதாகத் தகவல் வெளியானது. இதன்படி, நூற்றுக்கும் மேற்பட்டோர் தலா மூன்று லட்சம் ரூபாய்வரை செலுத்தி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது அம்பலமானது.

இது குறித்து செய்தியாளரிடம் கூறிய சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி சிந்தியா, ”ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் உயர்மட்டக் குழு அமைப்பது குறித்தும் அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை செய்யப்படும். அதன் பின்னர் குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: நளினிக்கு ஒரு மாதம் பரோல் - தமிழ்நாடு அரசு முடிவு

ABOUT THE AUTHOR

...view details