பெரம்பூரில் ’பிளாக் ஷீப்’ என்ற யூடியூப் சேனல் தங்களின் OTT தளத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், பிளாக் ஷீப் நிறுவனத்தின் சார்பில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அதில் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை, தொடர்ந்து 110 மணி நேரம் இடைவிடாது நேரலையில் ஈடுபட்டு ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்சில் பதிவு செய்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
உலக சாதனை படைத்த ’பிளாக் ஷீப்’! - ஓடிடி தளம்
சென்னை: 110 மணி நேர தொடர் நேரலையில் ஈடுபட்டு ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சில் பதிவு செய்து ’பிளாக் ஷீப்’ என்ற யூடியூப் சேனல் உலக சாதனை படைத்துள்ளது.
sheep
அடுத்ததாக, சுற்றுச்சூழல் நலனுக்காக பிளாக் ஷீப் காடு என்று தொடங்கப்பட்டு, மக்கள் உதவியோடு சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் மரங்கள் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் முதல் OTT தளம் என்ற பெருமையை பிளாக் ஷீப் யூடியூப் நிறுவனம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’விஷாலுக்கு மதிக்கவே தெரியாது’ - கொந்தளிக்கும் ’பவர் ஸ்டார்’