தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தும் மாநில அரசு குறைக்க மறுப்பதேன்? அண்ணாமலை கேள்வி - BJP

பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தும் மாநில அரசு குறைக்க மறுப்பதேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

BJP
BJP

By

Published : Nov 22, 2021, 10:15 PM IST

சென்னை : சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி பாஜக இளைஞரணி மற்றும் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநில துணைச்செயலாளர் கரு. நாகராஜன் மற்றும் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம், கராத்தே தியாகராஜன், மாநில மகளிர் அணி துணை தலைவர் நதியா உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழ்நாட்டு அரசுக்கு எதிராக கண்டன கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், “பாஜக ஆட்சியில் நான்கு வழி, ஆறு வழி சாலைகள் கொண்டு வரப்பட்டன. பெட்ரோல், டீசல் வரிப்பணம் தான் சாலைகள் அமைக்க பயன்படுத்தப்படுகிறது. திமுக அரசு அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துள்ளது. உடனடியாக தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.
மத்திய அரசு விலையை குறைத்த பின்னரும் பெட்ரோல், டீசல் விலையை தமிழ்நாடு அரசு குறைக்காததை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
கடந்த ஆட்சியின்போது பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என திமுக கூறியது. ஆனால் தற்போது அதனை செய்யாமல் மறுத்து வருகிறது” என்றார். இதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, “மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதி மட்டுமில்லாமல் பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது.பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தும், மாநில அரசு குறைக்கவில்லை. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு ஏன் மறுக்கிறது. மேலும், தமிழ்நாடு அரசு விலையை குறைக்காமல் மத்திய அரசு மீது பழி போட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். அவ்வாறு குறைக்கவில்லை என்றால் பாஜக சார்பில் தொடர்ந்து டிசம்பர் 3ஆம் தேதி வரை போராட்டம் நடத்தப்படும். விவசாயிகள் அணி சார்பில் மாட்டு வண்டி போராட்டம் மற்றும் மற்ற அணிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் துண்டுப்பிரசுரம், மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.மழை வந்தாலும் போராட்டங்கள் தொடரும். தமிழ்நாடு அரசு உடனடியாக பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதையும் படிங்க :'பொருளாதாரம் தெரியாமல் ஆட்சி நடத்திவரும் திமுக'- அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details