தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது' - நயினார் நாகேந்திரன்

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும், தேர்தல் நேரம் என்பதால் தேவையில்லாத காரணங்களைக் கூறி அரசியல் கட்சிகள் அரசியல் செய்துவருவது நல்லதல்ல என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

bjp state vp nainaar nagendran speech
bjp state vp nainaar nagendran speech

By

Published : Oct 16, 2020, 6:45 PM IST

சென்னை:அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது என பட்டாபிராமில் பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னை ஆவடி அருகேயுள்ள பட்டாபிராமில், மத்திய அரசுக்குச் சொந்தமான இந்திய உணவு வாணிப கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் தினக் கூலி தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு வடமாநிலங்களில் இருப்பது போன்று, அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை நடைமுறைப்படுத்தாத ஐ.என்.டி.யு.சி (INTUC) தொழிற்சங்கத்திலிருந்து விலகி பாஜக தொழிற்சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதன் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் மகாலட்சுமி முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பின்னர் பேசிய நாகேந்திரன், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள உத்தரவை விரைந்து நடைமுறைப்படுத்த, இந்திய உணவு வாணிப கழக நிர்வாகத்திடம் பேசி தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாகேந்திரன், ஓபிசி இடஒதுக்கீடு, மத்திய அரசு வழங்காது எனக் கூறவில்லை, காலம் முடிவுற்றதால் வழங்கமுடியாது எனத் தெரிவித்துள்ளது. இதை, தேர்தல் நேரம் என்பதால் எதிர்க்கட்சியினர் அரசியலாகுகின்றனர்.

மேலும், 800 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என இங்கிருக்கும் அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர் என்று கூறியவர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details