தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கூட்டணி அதிமுகவுடனா? ரஜினியுடனா? - தலைமை முடிவெடுக்கும் என்கிறார் முருகன்!

சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கூட்டணி உறுதியான நிலையில், அதிமுகவுடன் இன்னும் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை என பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Dec 4, 2020, 1:56 PM IST

Updated : Dec 4, 2020, 2:38 PM IST

சென்னை தி.நகரில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை, அக்கட்சியின் தலைவர் முருகன் சந்தித்து பேசினார். அப்போது அவர், ” பலரும் வேல் யாத்திரையை நடத்தக்கூடாது என்றும், இதனால் தமிழகத்தில் கலவரம் ஏற்படும் என்றும் கூறிய நிலையில், யாத்திரை நடத்தப்பட்டுள்ளது. புயல் மழை காரணமாக யாத்திரை தடைப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களில் 4 படை வீடுகளுக்கும் சென்று இறுதியாக டிசம்பர் 7 ஆம் தேதி திருச்செந்தூரில் யாத்திரை நிறைவு பெறும். அதில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் கலந்து கொள்ளவுள்ளார்.

வேளாண் சட்டங்களை வைத்து திமுக அரசியல் செய்ய நினைக்கிறது. தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைத்தும் அறிந்தவர்கள். இச்சட்டங்கள் குறித்து பாஜக சார்பில் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படும்.

ரஜினிகாந்த் புதிதாக கட்சி தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். பாஜகவில் இருந்து விலகி ரஜினியின் புதிய கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராகியுள்ள அர்ஜுன மூர்த்தி, திமுகவில் இருந்து விலகி குறைந்த காலத்திற்கு முன்புதான் பாஜகவில் இணைந்தார். தனி நபர் சார்ந்த கட்சியாக பாஜக என்றுமே இருந்தது இல்லை.

அதிமுகவுடனான கூட்டணி உறுதியா என்பதை அகில இந்திய தலைமை முடிவு செய்யும். ரஜினியுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் அகில இந்திய தலைமைதான் முடிவு அறிவிக்கும். அதேநேரம் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சியமைக்கும் “ எனத் தெரிவித்தார்.

கூட்டணி அதிமுகவுடனா? ரஜினியுடனா? - தலைமை முடிவெடுக்கும் என்கிறார் முருகன்!

அண்மையில் தமிழகம் வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு விழாவில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கூறியிருந்தனர். இதனால் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக அனைவரும் கருதியிருந்த நிலையில், ரஜினியின் புதிய கட்சி அறிவிப்புக்கு பிறகு பாஜக மாநிலத் தலைவர் முருகனின் இன்றைய பேச்சு, கூட்டணி கணக்குகள் மாறுமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் உடன் திமுக கூட்டணி வைக்குமா? - ஆ.ராசா

Last Updated : Dec 4, 2020, 2:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details