சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (செப்.07) பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் மோசடி நடந்திருப்பது தொடர்பாக, விசாரணை ஆணையம் அமைக்கக் கோரி மாநில தலைமைச் செயலாளர் சண்முகத்திடம், பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்ட மோசடி : விசாரணை ஆணையம் அமைக்க பாஜக மூத்த தலைவர் கோரிக்கை
சென்னை: பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் மோசடி நடைபெற்றது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கக்கோரி தலைமைச் செயலர் சண்முகத்திடம் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியதாவது, “பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் மோசடி நடைபெற்றதை தீவிரமாக ஆய்வு செய்து, உண்மையான விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைத்திட வலியுறுத்தியும், தவறு செய்தவர்கள்மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்மீது தலைமைச் செயலர் சண்முகம் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பை விரிவுபடுத்தி உண்மையான விவசாயிக்கு மட்டும் உதவித் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.