சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல்வேறு வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிகழ்ச்சிகளின் நடுவர்களாக சினிமா துறை சார்ந்தவர்களும், சின்னத்திரை கலைஞர்களும் பங்குகொள்கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று ஒளிபரப்பான ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் கலந்த சிறார்கள் பிரதமர் மோடியின் பெயரை சொல்லாமல், நிகழ்கால அரசியலை பகடி செய்யும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
நிர்வாக இயக்குநருக்கு கடிதம்
இந்த நிகழ்ச்சி குறித்து, தமிழ்நாடு பாஜக தொழில் நுட்பப்பிரிவு தமிழ்நாடு மாநிலத் தலைவர் நிர்மல் குமார் பெங்களூருவில் உள்ள தனியார் தொலைக்காட்சியின் தலைமையிட நிர்வாக இயக்குநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறார்களுக்கு என்ன பேச வேண்டும் எனத் தெரியாது என்றும், மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதை மட்டுமே அவர்கள் பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்நிகழ்வு சிறார்கள் மனதில் நஞ்சை விதைப்பதற்குச் சமமாகும் என்றும்; எனவே, நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிர்வாகம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும்; உடனே அந்த நிகழ்ச்சிப் பதிவுகளை நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டைச் சார்ந்த விடுதலை வீரர் உருவங்களுக்கு அனுமதி மறுப்பு - முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம்