சென்னை: ராஜா அண்ணாமலைபுரம் போட்கிளப் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (31). பாஜக பிரமுகரான இவர், 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர், வங்கியில் லோன் வாங்கித்தருவதாக கூறி 92 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஜூலை மாதம் சாஸ்திரிநகர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்தனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நிலையில், தினமும் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில், இன்று (செப்.01) காலை வழக்கம்போல் கையெழுத்துப் போடுவதற்காக காவல் நிலையத்திற்கு நாகராஜ் தன்னுடைய காரில் வந்தார்.
செல்போன் எண்ணை டிராக் செய்த போலீஸ்
பின்னர், காவல் நிலையத்தை விட்டு வெளியேறின நாகராஜை இரண்டு காரில் வந்த அடையாளம் தெரியாத எட்டு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. காவல் நிலையம் எதிரே நடந்த இந்த கடத்தல் சம்பவம் குறித்து சாஸ்திரி நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
பின்னர், நாகராஜின் செல்போன் எண்ணை டிராக் செய்தனர். அப்போது, போரூர் பகுதியில் உடற்பயிற்சி கூடத்தில் இருப்பதாக தெரியவந்தது. உடனடியாக தனிப்படை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடற்பயிற்சி கூடத்தில் வைத்து நாகராஜை கட்டிப்போட்டு அடித்ததாக தெரிகிறது.
கடத்தல் கும்பல் கைது