தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விசிக நிர்வாகி மீது பாஜக செய்தித் தொடர்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் - பாஜக செய்தித் தொடர்பாளர்

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி சமூக வலைத்தளத்தில் கொலை மிரட்டல் விடுப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை காவல்துறை
சென்னை காவல்துறை

By

Published : Dec 28, 2021, 2:03 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளராக இருப்பவர் நாராயணன் திருப்பதி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியில் பேசியது குறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதில், திருமாவளவன் திமுக மற்றும் காங்கிரஸ் உடனான கூட்டணித் தொடர வேண்டும். இல்லையென்றால், அது பாஜகவிற்குச் சாதகமாகி விடும் எனக் கூறிய கருத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். வளர்ந்து வரும் பாஜகவைப் பார்த்து திருமாவளவன் பயப்படுகிறார் என பதிவிட்டிருந்தார்.

சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

இந்தப் பதிவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தில்லை கருணாகரன் என்பவர் ட்விட்டர் மூலம் பதில் அளித்திருந்தார். இந்நிலையில், தில்லை கருணாகரன் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்சைக்குரிய டிவிட்டர் பதிவு

இதையும் படிங்க: RRR Pre Release Event 'பாகுபலி சாதனையை ஆர்.ஆர்.ஆர் முறியடிக்கும்' - உதயநிதி ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details