சென்னை: தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அமமுகவை இணைப்பது குறித்து அதிமுகவே முடிவெடுக்கும்- சி.டி. ரவி - அமமுக இணைவது குறித்து அதிமுகவே முடிவெடுக்கும்
அதிமுக - அமமுக இணைவது குறித்து அதிமுகவே முடிவெடுக்கும் எனத் தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
bjp incharge ct ravi about admk ammk merge
அப்போது பேசிய அவர், “அதிமுக உடனான பேச்சுவார்த்தை நல்லமுறையில் உள்ளது. நாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். சசிகலா தினகரன் - பலம், பலவீனம் அதிமுக-விற்குத் தான் தெரியும். அமமுக இணைவது குறித்து அதிமுகவே முடிவெடுக்கும்.
நாங்கள் எத்தனை தொகுதிகள் பெறுகிறோமோ, அத்தனையிலும் வெற்றி பெறுவோம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. விரைவில் முறையான அறிவிப்பு வரும்” எனத் தெரிவித்தார்.
TAGGED:
admk ammk merge