தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"105 ஐ விட 56 பெரியது என்று நினைப்பவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது" - எச். ராஜா பேட்டி - சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா

சென்னை: "105 ஐ விட 56 பெரியது என்று நினைப்பவர்களுக்கு சரியான கணித பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது" என்று எச். ராஜா பேட்டியளித்துள்ளார்.

bjp h. raja byte

By

Published : Nov 23, 2019, 7:59 PM IST

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணை வேந்தர் இ.பாலகுருசாமியின் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, "தனிப்பெரும் கட்சி என்ற முறையில் மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை கொடுக்க வேண்டிய பொறுப்பு பாரதிய ஜனதாவுக்கு உள்ளது. மகாராஷ்டிராவில் சமீபத்தில் தேர்தல் நடந்துள்ள நிலையில் மீண்டும் ஒருமுறை தேர்தல் நடந்தால் மிகப் பெரிய அளவில் பண விரயம் ஏற்படும்.

எச். ராஜா பேட்டி

மேலும் நிலையான ஆட்சியை வழங்க வேண்டும், மீண்டும் தேர்தலை தடுப்பது ஆகிய நோக்கத்துடன் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்திருக்கிறது." என்றார். தொடர்ந்து பேசிய அவர், "105யை விட 56 பெரியது என்று நினைப்பவர்களுக்கு சரியான கணித பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது .

கோவா தேர்தல் முடிவுக்குப் பிறகு சிறிய கட்சிகள் ஒன்று சேர்ந்து மனோகர் பரிக்கர்க்கு ஆதரவளித்தன. இங்கேயும் முதலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் யாரும் ஆட்சி அமைக்க முடியாததால்தான் அங்கு ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட்டது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க :அரசுத் திட்டங்கள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details