தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 6, 2021, 8:19 PM IST

ETV Bharat / city

'கே.எஸ். அழகிரி கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' - வி.பி.துரைசாமி

எல்.முருகன் குறித்து தெரிவித்த கருத்தை திரும்ப பெறவில்லை என்றால் கடுமையான விளைவுகளை கே.எஸ். அழகிரி சந்திக்க நேரிடும் என பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.

பாஜக துணைத்தலைவர் வி பி துரைசாமி, கே எஸ் அழகிரி
பாஜக துணைத்தலைவர் வி பி துரைசாமி

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில், பாரதிய ஜன சங்கம் நிறுவனர் டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் 120ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி இன்று (ஜூலை 6) நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், துணை தலைவர் வி.பி.துரைசாமி, மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழ்நாடு பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி, "தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனை கடுமையான சொற்களை பயன்படுத்தி விமர்சனம் செய்துள்ளார். அது கண்டிக்கத்தக்கது.

அரசுக்கு பாஜக துணை நிற்கும்

எல்.முருகன் வீணாக கடலுக்கு செல்லக்கூடிய காவிரி நீரை சேமிக்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளார். அவர் சொல்லும் கருத்துக்கு விமர்சனம் செய்யலாம் ஆனால் தரக்குறைவாக பேசக்கூடாது. கர்நாடக அரசு காவிரிவின் குறுக்கே அணை கட்டி வரும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு பாஜக துணை நிற்கும்" என்றார்.

ஏற்கெனவே, கர்நாடக மாநிலம் வழங்கும் காவிரி நீரை சேமிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்.முருகன் கூறியிருந்தார். இந்த கருத்தை எல்.முருகன் திரும்ப பெறவில்லை என்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பும் பாஜக கல்யாணராமன் மீது விசிக புகார்

ABOUT THE AUTHOR

...view details