தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் பக்தர்களிடம் கொடுக்கப்படும் - சிடி ரவி! - தமிழ்நாட்டு கோயில்

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் பக்தர்களிடம் கொடுக்கப்படும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.

பாஜக மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி ட்வீட்
பாஜக மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி ட்வீட்

By

Published : Mar 12, 2021, 5:49 PM IST

தமிழ்நாட்டு கோயில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என, ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 27ஆம் தேதி சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அதில் கோயில்களைப் பக்தர்களிடம் விடுங்கள். தமிழ்நாட்டு கோயில்களை விடுவிக்கும் நேரமிது எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகர்கள் உள்ளிட்ட பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி ட்விட் செய்துள்ளார். அதில், " சத்குருவின் ‘கோயில்களை பக்தர்களிடம் கொடுங்கள்’ என்ற எண்ணத்திற்கு எங்களுடைய ஆதரவை அளிக்கிறோம். இந்த நடைமுறை தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அமலுக்கு வரும். இதன் மூலம் கோயில்களை பக்தர்களே நிர்வகிக்க அனுமதிக்கப்படுவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை பக்தர்களுக்கே கொடுத்துவிடுங்கள் - சந்தானம் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details