தற்போது மின்னணு வாக்குப் பதிவு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் யார் வேண்டுமானாலும் வாக்கு போட முடியும். ஒருவரே வேறு ஒருவரின் வாக்கையும் மீண்டும் செலுத்த முடியும் . இதனால் கள்ள ஓட்டுப் போடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
குடியரசுத் தலைவருடன் புகைப்படம் அதுமட்டுமின்றி ஒருவர் எந்தத் தொகுதியில் இருக்கிறாரோ அந்தத் தொகுதியில் உள்ள அவரின் பெயர் உள்ள வாக்குச்சாவடியில் மட்டுமே வாக்கு போட முடியும். இதனால் வெளியூர்களில் பணிபுரிபவர்களின் சிலர் பணி நிமித்தம் காரணமாக தங்களின் வாக்கைச் செலுத்தாமல் உள்ளனர்.
அனைவருக்குமான மருத்துவம்: ஒடிசா மாணவருக்கு நாசா அழைப்பு...!
பயோமெட்ரிக் வாக்கு இயந்திரம்?
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பகச் செம்மல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட, கண் பதிவு ரேகையுடன் கூடிய, வாக்குப்பதிவு இயந்திரத்தினைக் கண்டுபிடித்துள்ளனர். 12ஆம் வகுப்பு மாணவர்கள் விஷால், சுதர்சன், சுகில் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கடந்த ஆண்டு பயோமெட்ரிக் ஆதார் உடன் கூடிய கண் ரேகை, வாக்குப்பதிவு இயந்திரத்தினைக் கண்டுபிடித்தனர்.
இந்த இயந்திரத்தில் வாக்காளரின் கண் ரேகையை ஸ்கேன் செய்தால் அவரின் ஆதாரில் உள்ள முகவரி வரும். அந்த முகவரி எந்த தொகுதியில் உள்ளதோ அந்த தொகுதியின் வேட்பாளருக்கு இவர் எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்க முடியும். அதேபோல் ஒருவர் ஒருமுறை வாக்களித்தவர், மறுமுறை வாக்களிக்க வந்தால் அவரின் கண் ரேகை ஸ்கேன் செய்யும் போதே அந்த இயந்திரம் தானாகக் கள்ள ஓட்டுப் போட வந்துள்ளார் என்பதை காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கும். அந்த வகையில் மாணவர்கள் இந்த புதிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மாணவர்களுக்கு அளிக்கும் செயல்முறை விளக்கம் உழுதலில் மாற்றத்தை ஏற்படுத்திய விவசாயி!
குடியரசுத் தலைவருக்குச் செயல்முறை விளக்கம்....
இந்த கண்டுபிடிப்பினை அடல் டிங்கரிங் திட்டத்தின் கீழ் மாணவர்கள் கண்டுபிடித்து இருந்தனர். குழந்தைகள் தினமான நேற்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் செயல்முறை விளக்கம் அளித்துள்ளனர். அப்போது பல்வேறு விளக்கங்களை அலுவலர்கள் கேட்டுள்ளனர்.
அவர்களின் விளக்கங்களுக்குப் பதிலளித்த மாணவர்களுக்குப் பயோமெட்ரிக் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்குமாறு குடியரசுத் தலைவர் மாளிகை அறிவுரை வழங்கியுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்துவிட்டு வந்த மாணவர்கள் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்பொழுது மேலும் பல கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் என இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.
பயோமெட்ரிக் வாக்கு இயந்திரம் இன்சுலினுக்கு பதில் மாத்திரை: அமெரிக்க ஆய்வாளர்களின் சாதனை!
பின்னர் ஈ டிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்குப் பேட்டியளித்த மாணவர் விஷால், ' பயோமெட்ரிக் இயந்திரம் குறித்து அளிக்கப்பட்ட விளக்கத்தினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார். மேலும் தேர்தல் ஆணையத்தில் இந்த இயந்திரம் குறித்து விளக்கமளித்து செயல்பாட்டுக்குக் கொண்டுவர முயல்வோம் எனத் தெரிவித்தார். டெல்லி சென்று குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றிப் பார்த்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதற்கு உதவியாக இருந்த ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும்' கூறினார்.