தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பயோ - மைனிங் முறையில் குப்பைகளை பிரிப்பதால் தீப்பற்றுவதை தவிர்க்கலாம்...! - தமிழ்நாடு பொது கணக்குக் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை

பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ - மைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணி நடக்கிறது. இந்த முறையால் குப்பைக் கிடங்கில் தீப்பற்றுவதை தவிர்க்க முடியும் என தமிழ்நாடு பொது கணக்குக் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Bio-mining
Bio-mining

By

Published : May 11, 2022, 7:54 PM IST

சென்னை: சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் பயோ - மைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. காய்கறி மற்றும் வீட்டு கழிவுகளை உள்ளடக்கிய மக்கும் குப்பைகள் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு அவற்றிலிருந்து உரம் தயாரிக்கப்படுகின்றது.

நெகிழிகள், துணிகள், பாட்டில்கள், கற்கள் உள்ளிட்டவை தனியாக பிரித்தெடுக்கப்பட்டு சிமெண்ட் ஆலை, சாலைப் பணிகள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தப் பணிகளை அரசின் பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதில் தமிழ்நாடு பொது கணக்குக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, பொது கணக்கு குழு உறுப்பினர்கள் சிந்தனை செல்வன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, பிரகாஷ், பூண்டி கலைவாணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை, "பெருங்குடி குப்பைக் கிடங்கில் இனி வரும் காலங்களில் சுகாதாரா சீர்கேடு இன்றி பராமரிக்கப்படும், பயோ - மைனிங் முறையில் குப்பைகளை கையாள்வதால் குப்பைக் கிடங்கில் தீப்பற்றுவது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க முடியும்.

சில நாள்களுக்கு முன்பு குப்பைகளில் மீத்தேன் கசிவு ஏற்பட்டதன் காரணமாகவே தீப்பற்றியது, சதிச் செயல்கள் ஏதும் இல்லை. ஒத்திவைப்பு தீர்மானம் மூலம் இது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டுவிட்டது.

சென்னையில் ஒருநாளுக்கு சேகரமாகும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பையில், 2 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் பெருங்குடியிலும், 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொடுங்கையூரிலும் கையாளப்படுகிறது. பெருங்குடி குப்பை கிடங்கால் அருகில் உள்ள பகுதியில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாதவாறு பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் கட்சியை விட்டு போன போதே கவலை படவில்லை, வைகோவை தூக்கி எறிந்தோம் - ஆர்.எஸ் பாரதி அதிரடி பேச்சு

ABOUT THE AUTHOR

...view details