தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் வருகைப் பதிவினை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்துவருகின்றனர். கடந்த ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட இந்த பயோமெட்ரிக் கருவியில் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் பெயர்கள் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு கட்சியினரும், ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒருவழியாக அரசுப் பள்ளி பயோமெட்ரிக் கருவியில் தமிழ் மொழி - பயோமெட்ரிக் கருவியில் தமிழ் மொழி
சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியில் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தேசிய தகவலியல் மையத்தினை தொடர்புகொண்டு பேசினர். அதனடிப்படையில் தற்பொழுது தமிழ் மொழியில் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜனார்த்தனன் கூறுகையில், ”தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம், தெலுங்கு மற்றும் பெங்காலி ஆகிய எட்டு மொழிகளும் இடம்பெற்றுள்ளன” என்றார்.