புது வண்ணாரப்பேட்டை, அம்மணியம்மாள் தோட்டம் பகுதியில், அடுத்தடுத்து இரண்டு இடங்களில் நள்ளிரவு இரண்டு மணி அளவில், எட்டு இருசக்கர வாகனங்கள் எரிந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தொடர்ந்து, இருசக்கர வாகனங்கள் வெடித்துச் சிதறும் சத்தம் கேட்டு அலறி எழுந்து ஓடி வந்த அப்பகுதியினர், வாகனங்கள் எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, தீயை அணைக்க அவர்கள் தீவிரமாக முயற்சித்தும், தீ அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் பரவி முழுவதுமாக எரிந்து சாம்பலானது.
நள்ளிரவில் எரிந்து வெடித்து சிதறிய இருசக்கர வாகனங்கள் : பொதுமக்கள் பீதி! - பைக் தீக்கிரை
சென்னை : புது வண்ணாரப்பேட்டையில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் இரு சக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர், ஆய்வு மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் யார் தீ வைத்தது என்பது குறித்து கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரண்டு இடங்களில் இரு சக்கர வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டு இருப்பதால், இது மன நலம் பாதிக்கப்பட்டவர்களின் செயலாக இருக்குமா அல்லது முன் விரோதம் காரணமா என்ற கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க : ஆம்பூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!