சென்னை திருவல்லிக்கேணி எல்லிஸ் சாலை தாயார் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் யாசிர் அரஃபாத்(26). இவர் நேற்றிரவு வழக்கம்போல் தனது இருச்சக்கர வாகனத்தை வீட்டினருகே நிறுத்தி வைத்துள்ளார். நள்ளிரவில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை இளம்பெண்கள் இருவர் கள்ள சாவிபோட்டு திருட முயற்சி செய்துள்ளனர்.
ஸ்டேசன்ல என் படம் ஏற்கனவே இருக்கு! சிக்கிய பைக் திருடி. - chennai theifs
சென்னை: கள்ள சாவிபோட்டு இருச்சக்கர வாகனத்தை திருட முயன்ற இளம்பெண்களில் ஒருவரை கண்காணிப்பு படக்கருவியின் உதவியுடன் பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அப்போது தனது வீட்டுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் படக்கருவியின் மூலம் தனது வாகனத்தை திருட முயற்சிப்பதை அறிந்த யாசிர், வெளியே சென்று இளம்பெண்களை பிடிக்க முயற்சி செய்துள்ளார். அவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோது ஒரு பெண்ணை மட்டும் பொதுமக்கள் பிடித்தனர்.
பிடிப்பட்ட அந்த பெண்ணை அண்ணா சாலை காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா(19) என்பதும், தப்பிச்சென்றது அவரது தோழி மோனிஷா(20) என்பதும், இவர்கள் இருவரும் திருட்டுச் சம்பவத்தில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் தப்பியோடிய மோனிஷாவை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.