சென்னை நுங்கம்பாக்கம் புது தெருவைச் சேர்ந்தவர் நூர் முகமது. இவர் தி. நகர் சத்யா பஜாரில் செல்ஃபோன் கடை நடத்திவருகிறார். இவரது மகன் சையது முகமது அல்பவாஸ் (23). இவர் கஞ்சா, மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மண்ணடியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த தனது இருசக்கர வாகனத்தில் சையது முகமது சென்றார். மது அருந்திவிட்டு போதையிலிருந்த சையது வேறு நபரின் வாகனத்தை மாற்றி எடுத்துச் சென்றுள்ளார்.