தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பின் தொடர்ந்து வந்த ஆசாமி.. பிக்பாஸ் பிரபலம் ஆர்ஜே வைஷ்ணவி புகார்

அறிமுகம் இல்லாத இளைஞர் ஒருவர் தன்னை பின் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக வீடியோ ஆதாரங்களுடன் பிக்பாஸ் பிரபலம் ஆர்ஜே வைஷ்ணவி, புகார் அளித்துள்ளார்.

ஆர்ஜே வைஷ்ணவி
ஆர்ஜே வைஷ்ணவி

By

Published : Jun 14, 2022, 1:00 PM IST

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் வைஷ்ணவி. இவர் ரேடியோ ஜாக்கி ஆகவும் பிரபலமானவர். நேற்று (ஜூன்13) அவரது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரைப் பற்றி புகார் அளித்துள்ளார்.

அதில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் தன்னைப் பின் தொடர்ந்து வருவதாகவும், வீட்டின் வாசலுக்கு வந்து தன்னை தொந்தரவு செய்வதாகவும் கூறியுள்ளார். அந்த நபர், தன் வளர்ப்பு நாயுடன் தான் நடை பயிற்சி மேற்கொள்ளும்போது மிரட்டும் விதமாக பின்தொடர்ந்து வந்ததாகவும் அதனால், தன் வீட்டை அந்த இளைஞர் தெரிந்து கொள்ளக்கூடாது என 30 நிமிடம் வீட்டுக்கு செல்லாமல் பதட்டத்துடன் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். அதன்பின் அந்த இளைஞருக்கு தெரியாமல் வீட்டிற்கு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் தனக்குத் தொந்தரவு தந்த அந்த நபர் குறித்து புகார் அளிப்பதற்காக செல்போன் பேசுவதுபோல் வீடியோ படம் எடுத்து வெளியிட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தனது தாயிடம் தெரிவித்தபோது, அந்த நபர் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டாம் எனவும், பழிவாங்கும் நோக்கில் ஆசிட் வீசினால் என்ன செய்வது என்று அச்சத்துடன் கேட்டதாக கூறியுள்ளார்.

நடந்தவை குறித்து புகார் அளிக்காமல் இருப்பதால், மீண்டும் அந்த மர்ம நபர் தொந்தரவு செய்யாமல் இருப்பாரா? அல்லது வேறு ஏதேனும் பெண்ணிற்கு இதுபோன்று நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற அடிப்படையில் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார். சென்னை காவல் துறையின் சமூக வலைத்தள பக்கத்தை இணைத்து இந்தப் புகாரைத் தெரிவித்துள்ளார்.

தைரியமாக கருத்துக்களை பதிவிட்டு டிவிட்டரில் புகார் அளித்ததற்கு வைஷ்ணவிக்கு காவல்துறை தரப்பில் இருந்து சமூக வலைதளம் மூலம் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதாகவும் இதுபோன்ற நிலைமைகளில் காவல்துறையின் அவசர அழைப்பு எண் 100 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகாரளிக்க வேண்டும் (அ) காவலன் உதவி என்ற செயலியை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறும் சென்னை காவல்துறை சமூக வலைதளம் மூலம் பதில் அளித்துள்ளது.

இதையும் படிங்க: ஆளுநர் ரவி, பதவியில் இருந்து விலகி முழுநேர ஆர்எஸ்எஸ் தொண்டராக பணியாற்றுவது தான் பொருத்தமானது - திருமாவளவன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details