தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்கும் - டி.ராஜா - அ.தி.மு.க

சென்னை: திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் இடைத்தேர்தல்களின் முடிவு அதிமுகவின் ஆட்சியை இழக்கச் செய்துவிடும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

டி.ராஜா

By

Published : Apr 9, 2019, 9:22 PM IST

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகின்ற மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டது.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது,

"தேர்தல் ஆணையம் மீதமிருந்த சட்டமன்ற காலியிடங்களுக்கு இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் காலியாக இருக்கும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா அளித்த பிரத்யேக பேட்டி

இந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் அ.தி.மு.க-வுக்கு எதிராகவும், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவும் வாக்களிக்க உள்ளார்கள்.

இது ஆளுகின்ற அ.தி.மு.க-வுக்கு தோல்வியை உருவாக்கும். தமிழகம் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. அதற்கு இந்த சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் அடித்தளத்தளத்தை உருவாக்க உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details