சென்னை:இந்தியா முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் தடையில்லா இணையதள சேவை வழங்கி அரசின் சேவைகளை கொண்டு செல்லும் திட்டமே பாரத் நெட் திட்டம். இதற்காக மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கியுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ.1,230 கோடியே 90 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கண்ணாடி இழை குழாய் மூலம் இணையதள சேவை வழங்கப்பட உள்ளது.