திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சுய விவரங்களை மாற்றியுள்ளார். அதில், Belongs to the Dravidian stock (திராவிட இனத்தை சேர்ந்தவன்) என குறிப்பிட்டுள்ளார்.
1962ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணா, "I claim Sir, to come from a country, a part in India now, but which I think is of a different stock, not necessarily antagonistic. I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian. That does not mean that I am against a Bengali or a Maharashtrian or a Gujarati. As Robert Burns has stated, ‘A man is a man for all that’. I say that I belong to the Dravidian stock and that is only because I consider that the Dravidians have got something concrete, something distinct, something different to offer to the nation at large. Therefore it is that we want self-determination” என முழங்கியிருப்பார்.
அதாவது, இந்தியாவின் ஒரு பகுதியாக ஆகியுள்ள ஒரு நாட்டில் இருந்து நான் வந்திருக்கிறேன். அதில் வேறுபட்ட இன மக்கள் வாழ்கிறார்கள், அவர்கள் மற்றவர்களுக்கு எதிரிகள் அல்ல. நான் ஒரு திராவிடன். என்னை திராவிடன் என அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராத்தியருக்கோ, குஜராத்திக்கோ எதிரானவன் அல்ல. ராபர்ட் பர்ன்ஸ் குறிப்பிட்டது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான்.