சென்னை: நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள படம் 'பீஸ்ட்'. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஏற்கெனவே இப்படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிளான 'அரபிக் குத்து' இணையதளத்தில் பெரும் சாதனை படைத்தது. இரண்டாவது சிங்கிளான 'ஜாலியோ ஜிம்கானா' எனும் பாடலை நடிகர் விஜயே பாடியிருந்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ள நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பாக இருந்தது.
'லேட் தான்... ஆனா இன்னைக்கு இதுதான் ஹாட்': பீஸ்ட் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - நடிகர் விஜய்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதி படத்தின் ட்ரெய்லரை வெளியிடப்போவதாக படக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பீஸ்ட் ட்ரைலர்
Last Updated : Mar 30, 2022, 8:46 PM IST