சென்னை:நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இன்று (ஏப். 13) வெளியானது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. உலகின் பல திரையரங்கில் வெளியானது. இதனையடுத்து தமிழ்நாட்டின் பல திரையரங்கில் இன்று அதிகாலை காட்சி வெளியானது. அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
வெளியானது ’பீஸ்ட்’ - படக்குழுவினரின் FDFS ஷோ! - படக்குழுவினரின் FDFS ஷோ
விஜய் நடித்து இன்று வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் முதல் காட்சியை சென்னை குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் அப்படக்குழுவினர் பார்த்து ரசித்தனர்.
பீஸ்ட் படக்குழுவினர் இன்று அதிகாலை காட்சி காண்பதற்காக சென்னையில் உள்ள குரோம்பேட்டை வெற்றி திரையரங்கிற்கு வந்தனர். நடிகைகள் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் ரசிகர்களுடன் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்தனர். ரசிகர்களுக்கு மத்தியில் நடிகை பூஜா ஹெக்டே மிகவும் குதூகலமாக கூச்சலிட்டு படத்தை பார்த்து ரசித்தார். மேலும், 'டாக்டர்' படத்தின் நாயகி பிரியங்கா மோகனும் படக்குழுவினருடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:‘பீஸ்ட்’ : விஜய் ரசிகர்களால் திருவிழா கோலத்தில் வேலூர் திரையரங்கு