தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தங்கம், வெண்கலம் வென்ற தமிழ்நாடு கூடைப்பந்து வீரர்களுக்கு பரிசுத்தொகை - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்! - 42 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீரர்-வீராங்கனைகளுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 42 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை வழங்கினார்.

கூடைப்பந்து
கூடைப்பந்து

By

Published : Apr 13, 2022, 9:52 PM IST

சென்னை:தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்து வீரர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், "71ஆவது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்கள் பிரிவில் தங்கப்பதக்கமும், பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற வீரர், வீராங்கனைகள் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றதாக'' தெரிவித்தார்.

தங்கம் வென்ற 12 வீரர்களுக்கும், தலா இரண்டரை லட்சம் ரூபாய், வெண்கலம் வென்ற 12 வீராங்கனைகளுக்கும், தலா ஒரு லட்சம் ரூபாய் என மொத்தம் 42 லட்சம் ரூபாயை பரிசுத்தொகையாக முதலமைச்சர் வழங்கினார்.

இதையும் படிங்க: பூக்களின் விலை உயர்வு - நெல்லையில் ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1,500க்கு விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details