ஐந்து வழக்கறிஞர்கள் பணி செய்யத் தடை: இது பார் கவுன்சில் பஞ்சாயத்து! - 5 advocates banned to work in courts
சென்னை: கொலை வழக்கு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய வி.ப்ரீத்தா உள்ளிட்ட ஐந்து வழக்கறிஞர்களை நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும் பணி செய்ய தடைவிதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
பார் கவுன்சில்
கொலை வழக்கில் தொடர்புடைய வி.ப்ரீத்தா, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பி.அருள், போலியாக சமரச மையங்கள் நடத்தி மக்களை ஏமாற்றிய கே.ராஜாராம், பி.வி ரவி, பி.கே முத்துசாமி உள்ளிட்ட ஐந்து வழக்கறிஞர்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் உள்ளிட்டவற்றில் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி உத்தரவிட்டுள்ளது