தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உயர் நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சுபஸ்ரீ வழக்கு! - சுபஸ்ரீ வழக்கு

சென்னை: பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்த வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

high court

By

Published : Sep 13, 2019, 4:42 PM IST

அதிமுக பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது, இந்த வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்று தெரிவித்த நீதிபதிகள், சுபஸ்ரீ குடும்பத்திற்கு எவ்வளவு நஷ்டஈடு கொடுக்கப்போகிறீர்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதேபோல், நஷ்ட ஈடு வழங்குவதற்கான பணத்தை விதிமீறல்களை கண்டுகொள்ளாத அலுவலர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யலாம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற செயல்களுக்கு துணை போகும் அரசு ஊழியர்களை பணியிடைநீக்கம் செய்யலாம் எனவும் கூறினர்.

இதற்கிடையே, சுபஸ்ரீ குடுமப்த்திற்கு தமிழ்நாடு அரசு ரூ. 5 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details