தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் படங்கள் அகற்றம் - அதிமுக தலைமை அலுவலகத்தில்

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் இன்றி பேனர் வைக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 15, 2022, 9:35 PM IST

Updated : Sep 15, 2022, 9:56 PM IST

சென்னை: அதிமுக தலைமை அலுவகத்தில் ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றம் செய்யப்பட்டு எடப்பாடி பழனிசாமி இருக்கும் புதிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதிமுக தலைமை யார்? என்பதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (செப்.15) வைக்கப்பட்ட புதிய பேனர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்து சென்ற ஓரிரு நாட்களில் பன்னீர்செல்வம் பேனர்கள் அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் படங்கள் அகற்றம்

இதையும் படிங்க: அண்ணா எங்களுக்குத்தான் சொந்தம்: அதிமுக - திமுகவினரிடையே வெடித்த மோதல்

Last Updated : Sep 15, 2022, 9:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details