தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளற்ற ஊரடங்கின் காரணமாக கரோனா தொற்று பரவல் சற்றே குறைந்துள்ளது. இதனால் வருகிற 14ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வங்கி வேலை நேரத்தையும் வருகிற 13ஆம் தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து வங்கி கிளைகளுக்கும் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ”காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே வங்கி கிளைகள் செயல்படும். ஏற்கனவே அறிவித்ததுபோல வங்கி பரிவர்த்தனைகள் பகல் 2 மணி வரை மட்டுமே நடைபெறும். மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் மாலை 5 மணி வரை செயல்படும். வங்கிக் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மாற்று முறையில் செயல்பட வேண்டும்.