தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பதிவு எண் இல்லாத பேட்டரி ஆட்டோ! அரசு பதிலளிக்க ஆணை!

சென்னை: குப்பைகளை அகற்றும் பதிவு எண், காப்பீடு இல்லாத பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

auto
auto

By

Published : Mar 2, 2021, 12:12 PM IST

தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில், குப்பைகளை அப்புறப்படுத்த பேட்டரி ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 3 ஆயிரம் பேட்டரி ஆட்டோக்கள் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து துறையில் பதிவு செய்யப்படாத இந்த ஆட்டோக்களுக்கு, காப்பீடும் இல்லை என்பதால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பதிவு செய்யப்படாமல் இயக்கப்படும் ஆட்டோக்களால் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்படும் பாதசாரிகள், எந்த இழப்பீடும் பெற முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மோட்டார் வாகன சட்டப்படி, பேட்டரி மூலம் இயக்கப்படும் மூன்று சக்கர வாகனங்களை பதிவு செய்ய எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை எனவும், கடந்த 18 மாதங்களாக இந்த ஆட்டோக்கள் இயக்கப்படுவதாகவும், இருந்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கடமை தவறி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சட்ட விரோதமாக இயக்கப்படும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், கடமை தவறிய போக்குவரத்து துறை அதிகாரிகள் மீதும், போக்குவரத்து காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும், காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

இதையும் படிங்க: அணுமின் நிலைய பணிகளுக்கான தேர்வு மையம் சென்னையில் அமைக்க பரிசீலனை - சு. வெங்கடேசன் எம்பி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details