சுற்றுச்சூழல் ஆர்வலர் நவ்ரோஸ் கெர்சாஸ்ப் மோடி என்பவர், ஆரோவில் அறக்கட்டளைக்கு எதிராக மனு தாக்கல்செய்திருந்தார். கிரவுண் சாலை என்னும் பெயரில் புதிய சுற்றுவட்டச் சாலை அமைப்பதற்காக வனப்பகுதி எனக் கருதப்படும் இடத்தில் அதிக அளவிலான மரங்களை வெட்டியுள்ளதாகவும், அனுமதியின்றி கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஆரோவில் அறக்கட்டளைக்கு எதிராகக் குற்றஞ்சாட்டி அம்மனுவில் தெரிவித்திருந்தார்.
மரங்களை வெட்டத் தடை
இதனால் மரங்களை வெட்ட தடைவிதிக்க வேண்டும், கூடுதலாக, இதுவரை ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு இழப்பீடு வசூலிக்க வேண்டும் என்றும் கோரிக்கைவைக்கப்பட்டது.