தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இயக்குநர் ஆர்.கே. செல்வமணிக்கு பிடிவாரண்ட் - இயக்குநர் செல்வமணிக்கு பிடிவாரண்ட்

திரைப்பட தயாரிப்பாளர் முகுந்த் சந்த் போத்ரா வழக்கில் இயக்குநர் ஆர்.கே செல்வமணிக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

bailable-warrant-against-director-selvamani-on-producer-mukund-chand-bothra-case
bailable-warrant-against-director-selvamani-on-producer-mukund-chandbailable-warrant-against-director-selvamani-on-producer-mukund-chand-bothra-case-bothra-case

By

Published : Apr 5, 2022, 12:43 PM IST

சென்னை: திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு இருவரும் 2016ஆம் ஆண்டுதனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தனர். அப்போது, தயாரிப்பாளர் முகுந்த் சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த கருத்துகள் தனக்கு அவதூறு பரப்பும் வகையில் பேசப்பட்டிருப்பதாக போத்ரா இருவர் மீதும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே போத்ரா உயிரிழந்ததால், அவரது மகன் ககன் போத்ரா வழக்கை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கு இன்று (ஏப். 4) விசாரணையின்போது இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, அருள் அன்பரசு ஆகியோர் ஆஜராக வில்லை. குறிப்பாக அவர்கள் தரப்பு வழக்கறிஞரும் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.

இதனால் நீதிபதி, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, அருள் அன்பரசு இருவருக்கும் ஜாமீனில் வெளி வரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். அந்த வகையில் வழக்கு ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க:மிஸ்டர் லோக்கலும் நீதிமன்ற வழக்கும்! - இது சிவகார்த்திகேயனின் 'மான் கராத்தே'

ABOUT THE AUTHOR

...view details