தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஓமைக்கிரான் பரவல் அதிகரிப்பு - சுகாதாரத் துறை - ஓமைக்கிரான்

தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஓமைக்கிரான் வகை பாதிப்பு ஒரே மாதத்தில் 25.2% அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறை
சுகாதாரத் துறை

By

Published : Jun 22, 2022, 2:28 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து சுகாதாரத்துறை பல்வேறு ஆய்வுகளையும் ஆலோசனைகளின் அதிகாரிகள் மட்டத்தில் நடத்தி வருகிறது.

ஓமைக்கிரான் வகை பாதிப்புகள் தற்போது உருமாற்றம் அடைந்து இருப்பதாகவும் எட்டு வகையான உருமாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதில் தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஓமைக்கிரான் வகை பாதிப்பு மே மாதம் 4 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது அது 25.2% ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் மரபணு பகுப்பாய்வு களை அதிகப்படுத்த உள்ளதாக சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

மக்கள் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து அதிகரிக்க செய்ய வேண்டும் என்றும், இப்படி செய்தால் பிஏ5 வகை கரோனா பரவலை தடுக்கலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பொறியியல் படிப்பில் சேர கட் ஆப் 33 மதிப்பெண் வரை குறையலாம் - கல்வி ஆலோசகர் அஸ்வின்

ABOUT THE AUTHOR

...view details